ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!
கேரளாவில் ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியிலுள்ள வாலாஞ்சேரியில் போதைப் பொருள் அடிமைகளாக இருந்த பலரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் சிலர் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போதைப் பொருள் பழக்கமுள்ளவர்கள் என தெரிய வந்ததை அடுத்து மருத்துவ சோதனை நடத்தப்பட்டது.
இந்த சூழலில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்கும்போது, 3 வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட மேலும் 9 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
அனைவரும் ஒரே போதை ஊசியைப் பயன்படுத்தியதால் நோய்த்தொற்று பரவியிருக்கலாம் என மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து மேலாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் தேவையான சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதே எங்களின் முதன்மையான நோக்கம்" என்று மலப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரேணுகா தெரிவித்தார்.
Edited by Mahendran