செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (14:27 IST)

டிவிட்டரில் டிரெண்டாகும் ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்.. அமித் ஷாவின் கருத்துக்கு எதிரொலி

ஹிந்தி தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒரே மொழி ஹிந்தி மொழி தான் என கூறிய நிலையில் ஹிந்தி எதிர்ப்பிற்கான ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஹிந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டை அடையாளப்படுத்தும் மொழி ஹிந்தி தான் எனவும், நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியை போலவே ஹிந்தியையும் பயில வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்த பல அரசியல் தலைவர்கள், பாஜக ஹிந்தி யை நுழைக்க பார்க்கிறது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக #StopHindiImposition #StopHindiImperialism #தமிழ்வாழ்க ஆகிய ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. இந்த ஹேஷ்டேக்குகள், இன்றைய ஹிந்தி தின ஹேஷ்டேக்கான #HindiDiwas ஆகிய ஹேஷ்டேக்கை பின்னுக்கு தள்ளி டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.