தமிழக முதல்வரின் ஆய்வுகள் இன்று தொடக்கம்.. கோவையில் முதல்கட்ட ஆய்வு..!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கோவையைப் பார்வையிட உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களிடம் சரியாகச் சென்றடைவதற்கான நிலைமைகளை மாவட்ட ரீதியாக பரிசோதனை செய்ய கள ஆய்வுகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ள உள்ளார்.
இதன்படி முதல் கட்டமாக இன்று கோவையில் துவங்குகிறார். இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து கோவைக்கு புறப்படும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 11.30 மணியளவில் விளாங்குறிச்சியில் அமைந்துள்ள புதிய ஐடி வளாகத்தை திறந்து வைக்கிறார், இது ரூ.114.16 கோடி செலவில் 3.04 ஏக்கர் பரப்பில், 8 மாடிகளை கொண்டது.
அதன்பின் நண்பகல் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் நில ஆவணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்க உள்ளார்.
மேலும் மாலை 4 மணிக்கு சிவாலயா திருமண மண்டபத்தில் தங்க நகை வியாபார அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். தங்க நகைத் துறையில் உள்ள சிக்கல்களைப் பற்றி அவர்களிடம் பேச உள்ளார். அதன்பின் போத்தனூரில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்க உள்ளார்
Edited by Siva