புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (08:15 IST)

பாய்பிரண்டுடன் ஊர்சுற்றிவிட்டு பின் பலாத்கார புகார் அளிப்பதா? முதல்வரின் சர்ச்சை பேச்சு

பெரும்பாலான இளம்பெண்கள் தங்கள் காதலர் மீதே பலாத்கார புகார் அளிப்பதாக ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஹரியானா தலைநகர் சண்டிகரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் கட்டார், 'பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. பெண்கள் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் தங்களுடைய பாய்பிரண்டுடன் ஊர்சுற்றுகின்றனர். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டவுடன் இத்தனை நாள் ஊர்சுற்றிய நபர் மீதே பாலியல் புகார் கொடுக்கின்றனர்' என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். பெரும்பாலான பெண்களுக்கு பாலியல் தொல்லை அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களால் ஏற்படுவதால் பெண்கள் தங்களுடைய காதலரை, பாய்பிரண்டை தேர்வு செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த கருத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுரேஜ்வாலா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பலாத்கார குற்றங்களை தடுக்க முடியாத கட்டார் அரசு பெண்கள் மீது குற்றஞ்சுமத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.