செருப்ப கழட்டி விட்டேன் பாரு ஒரு விடு!!! தெறிக்கவிட்ட இளம்பெண்; தெறித்துஓடிய வாலிபர்கள்
உத்திரபிரதேசத்தில் தன்னை சீண்டிய வாலிபர்களை இளம்பெண் அடித்து நொறுக்கியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் ஈட்டா பகுதியை சேர்ந்த இலம்பெண் ஒருவர் ரோட்டில் தனியாக சென்று கொண்டிருந்தபோது, இரண்டு வாலிபர்கள் அந்த பெண்ணிடம் வம்பிழுத்துள்ளனர்.
இதனை கண்டுகொள்ளாத அந்த பெண், வேகமாக நடக்க ஆரம்பித்துள்ளார். ஆனாலும் விடாத வாலிபர்கள் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொறுத்து பொறுத்து பார்த்த இளம்பெண் பொங்கியெழுந்து அந்த வாலிபர்களை நடுரோட்டில் அடித்து துவைத்தார். வலி தாங்க முடியாத வாலிபர்கள் அலறினர். அந்த பெண் தனது செருப்பைக் கழட்டி அந்த அயோக்கியன்களை வெளுத்தெடுத்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த வாலிபர்களை கைது செய்தனர். மேலும் சமயோஜிதமாக செயல்பட்ட பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.