அப்படியே அவர் மாதிரி இருக்காரே! பானிபூரி விற்கும் டூப்ளிகேட் மோடி! – வைரல் வீடியோ!
குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி போன்ற தோற்றம் மற்றும் உடையுடன் நபர் ஒருவர் பானிபூரி விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிரபல தலைவர்கள் மேல் ஈர்ப்பு கொண்ட மக்கள் பலர் அவர்களை போல அலங்காரம் செய்து, உடையணிவது வழக்கமாக உள்ளது. தமிழ்நாட்டிலும் எம்ஜிஆர், ரஜினிகாந்த் போல சிலர் வேடமிட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதை காண முடியும். அதுபோல நரேந்திர மோடி பிரதமரான பிறகு அவரை போல தோற்றம் கொண்ட பலரும் அவர் போல உடையணிந்து சாலைகளில் தோன்றுவது சில பகுதிகளில் சகஜமாகியுள்ளது.
தற்போது குஜராத்தின் ஆனந்த் பகுதியில் உள்ள பானிபூரி கடை ஒன்றில் ஒருவர் பிரதமர் மோடி சாயலில் பானிபூரி விற்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அணில் பாய் கட்டார் என்ற அந்த நபர் அங்கு நீண்ட காலமாக பானிபூரி விற்று வந்துள்ளார். பலரும் அவர் பிரதமர் மோடி சாயலில் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் பிரதமர் மோடி போலவே தாடி வளர்த்து, கண்ணாடி அணிந்து, ஆடைகளும் அதே போல அணிந்து அணில் பாய் பானிபூரி விற்று வருகிறார். பிரதமர் மோடி டீ விற்று உயர்ந்தது போல தானும் பானிபூரி விற்று வருவதாக பெருமைப்படுகிறாராம் அணில் பாய். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதை ஃபுட் ப்ளாக்கர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Edit by Prasanth.K