1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (17:43 IST)

பெண் சீடரை பாலியல் வன் கொடுமை செய்த ஆசாராம் பாபுக்கு ஆயுள்தண்டனை!

asharam bapu
பெண் சீடரை பாலியல் வன் கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் பெண்களை பாலியல் வன் கொடுமை செய்த புகார் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, இதுதொடர்பாக வழக்கு குஜராத் மா நில நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில்  நேற்று குஜராத் மாநில காந்தி மாவட்ட அமர்வு  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என உறுதி செய்து ஆயுள்தண்டை விதித்து தீர்ப்பளித்தது, அவருடன் குற்றம்சாட்டப்பட்டிருந்த அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 5 பேரை  போதிய ஆதாரமில்லை என்று கூறி விடுவித்தது.

ஏற்கனவே அவர் ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் சீடருக்கு பாலியல் தொல்லை அளித்ததற்காக  ராஜஸ்தான் சிறையில் ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடடத்தக்கது.