செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2023 (08:06 IST)

இந்தியாவின் 8 மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து: ஆய்வு அறிக்கையில் தகவல்!

earthquake
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து 8000 க்கும் அதிகமானவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் வலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என்று தெரிகிறது. 
 
இந்த நிலையில் குஜராத் உள்பட 8 இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குஜராத், பீகார், அசாம், இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 
 
மேலும் டெல்லி, என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நிலநடுக்க ஆபத்து இருப்பதாகவும் இந்தியாவின் 59% நிலப்பரப்பு கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva