1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (12:42 IST)

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

Election Commission
சமீபத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அம்மாநிலத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் சற்று முன் தேர்தல் ஆணையம் குஜராத் மாநிலத்தின் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது
 
சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்
 
குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளில் இருக்கும் நிலையில் அந்த சட்டமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
குஜராத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்றும், தேர்தலுக்காக மொத்தம் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று கூறிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 1,274 வாக்குச்சாவடிகள் பெண்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களால் முழுமையாக நிர்வகிக்கப்படும் என்று தெரிவித்தார். 
 
Edited by Mahendran