12 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபரான லூலா டி சில்வா! – பிரேசிலில் கொண்டாட்டம்!
லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் கருத்து கணிப்புகளை கடந்து வெற்றி பெற்று புதிய அதிபராகியுள்ளார் லூலா டி சில்வா.
லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பழமையான கலாச்சாரத்தையும், இடதுசாரி சிந்தனைகளையும் அதிகம் கொண்ட நாடு பிரேசில். ஸ்பானிய மொழி பேசும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே போர்ச்சுக்கல் மொழி அதிகம் பேசும் நாடும் பிரேசில்தான்.
பிரேசிலில் பல ஆண்டுகளாக ஜனநாயக ஆட்சி நடைபெற்ற நிலையில் 1964 முதல் 1985 வரை ராணுவ ஆட்சி நடந்தது. அதை தொடர்ந்து மக்களிடையே இடதுசாரிய சித்தாந்தங்கள் தோன்றி வளரவே மீண்டும் இடதுசாரி கட்சிகள் பல தோன்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை நிறுவின.
அப்படியான கட்சிகளில் ஒன்று தொழிலாளர் கட்சி (Workers Party). 1980ல் உருவான இந்த அரசியல் கட்சி மக்களிடையே பிரபலம் அடைந்து கடந்த 2002ல் முதன்முறையாக பிரேசிலில் ஆட்சி அமைத்தது. தொழிலாளர் கட்சியின் முதல் அதிபராக தேர்வானவர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா (Luiz inacio Lula da silva). இவர் தொடர்ந்து 2002 முதல் 2010 வரை இரண்டு முறை அதிரபாக பதவி வகிதார். பின்னர் 2010 தேர்தலிலும் தொழிலாளர் கட்சியே வென்றது. 2014க்கு பிறகு தொழிலாளர் கட்சி மீதான புகார்கள் காரணமாக மக்களிடையே செல்வாக்கு குறைந்திருந்தது.
2014க்கு பிறகு ப்ரெசிலியன் டெமாக்ரடிக், சோசியல் லிபரல் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்து வந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொழிலாளர் கட்சி பிரேசிலின் ஆட்சியை பிடித்துள்ளது. தொழிலாளர் கட்சி மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி காரணமாக அது வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்றே கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
அந்த கருத்து கணிப்புகளை பொய்யாக்கி பெரும்பான்மை ஆதரவுடன் பிரேசிலில் ஆட்சியமைத்துள்ளது தொழிலாளர் கட்சி. அந்த வகையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக பிரேசிலின் அதிபராக பதவியேற்கிறார் லூலா டி சில்வா. இந்த வெற்றியை கட்சியினரும், பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர். டி சில்வா தனது ஆட்சி காலத்தில் பிரேசிலில் கொண்டு வந்த மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்த பரப்புரையே வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது.
Edited By Prasanth.K