1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 மே 2021 (10:01 IST)

டவ்-தேவ் புயல் கோரதாண்டவம்: குஜராத் சேத விவரங்கள்

அரபிக்கடலில் உருவான டவ்-தேவ் புயல் குஜராத்தில் ஏற்படுத்திய சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 

 
சமீபத்தில் அரபிக்கடலில் உருவான டவ்-தேவ் புயல் கேரளா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் புரட்டிப்போட்டது என்பதும் குறிப்பாக குஜராத்தின் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்நிலையில் குஜராத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 
 
அதன்படி, 16,500 வீடுகள் சேதமடைந்ததாகவும், 40,000 மரங்கள் மற்றும் 1,081 மின்கம்பங்கள் சரிந்ததாகவும், 159 சாலைகள் சேதமடைந்து 196 பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில  முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 
 
மேலும், டவ்-தேவ் புயலால் 7 பேர் பலியாகி உள்ளனர். அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2,437 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.