திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (07:45 IST)

குஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்

குஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்
அரபிக் கடலில் உருவான டவ்தேவ் புயல் நேற்று இரவு குஜராத் மாநிலத்தை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் கோரத்தாண்டவம் ஆடி குஜராத் மாநிலத்தை கடந்துள்ளது 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கிய சாலைகள் உள்ள பல மரங்கள் வேரோடு கீழே விழுந்துள்ளது. மேலும் மின் கம்பங்களும் கீழே விழுந்த காட்சிகளை புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீரில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் டவ்தேவ் புயலால் ஏற்பட்ட சேதத்தை மீட்பு பணிகளை கவனிக்க மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த புயல் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்பீடு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் உயிர் சேதம் குறித்த மதிப்பு கணக்கீடு இன்னும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே குஜராத் மாநிலம் கொரோனாவால் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது தற்போது புயலும் சேர்ந்து அம்மாநிலத்தை உருக்குலைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது