ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 மே 2021 (08:19 IST)

மணிக்கு 185 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடக்கும் டவ்-தே !

குஜராத் மாநிலத்தை டவ்தேவ் புயல் நெருங்கி வருவதாகவும் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை குஜராத் மாநிலத்தை புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்த புயல் குஜராத் மாநிலத்தை கடும் சேதத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போது மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரபிக்கடலில் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி தற்போது அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
 
இன்னும் 12 மணிநேரத்திற்குள் அதி தீவிர புயல் மேலும் தீவிரமடைந்து இன்று மாலை குஜராத் கடற்பகுதியை நெருங்கும் என்றும் நள்ளிரவு அல்லது அதிகாலை போர்பந்தர் அருகே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.