குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பாதிப்பு!
குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி அவர்கள் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார் இதனையடுத்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு ஓய்வு எடுக்க அனுப்பி வைக்கப்பட்டார்
இந்த நிலையில் தற்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
முதல்வர் விஜய் ரூபனாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமாகி விடுவார் என்று அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அவர்கள் கூறியபோது முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் கூறினார்