1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (09:21 IST)

ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர்.! புதிய அரசின் அடுத்த அதிரடி திட்டம்...!

தெலுங்கானாவில் ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 100 நாட்களுக்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. அதன்படி தேர்தலுக்கு முன் மக்களுக்கு அளித்த 6 வாக்குறுதிகளில் இரண்டு வாக்குறுதிகளை 10 நாட்களில் அக்கட்சி நிறைவேற்றி உள்ளது. தற்போது மகாலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் மற்றொரு துணைத் திட்டமாக ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட தினமான டிசம்பர் 28ஆம் தேதி இந்த சிலிண்டர் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கெடுப்பு நடத்தி பயனாளிகளை தேர்வு செய்ய அதிக நேரம் எடுக்கும் என்பதால், மொத்தம் சுமார் ஒரு கோடி இணைப்புகளுக்கு ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர் வழங்கலாம் என சொல்லப்படுகிறது.  இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு 4,450 கோடி ரூபாய் சுமை ஏற்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.