வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (09:21 IST)

ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர்... ஆலோசனை நடந்து வருவதாக முதல்வர் தகவல்..!

ஏற்கனவே ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் 500 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை ஆகி வரும் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் 500 ரூபாய்க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
சமையல் கேஸ் சிலிண்டர் விலை தற்போது ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி 500 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் தந்து கொண்டிருக்கிறது. 
 
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாநிலத்திலும் ரூபாய் 500க்கு சிலிண்டர் கொடுக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் கூறிய போது சமையல் கேஸ் 500 ரூபாய்க்கு கொடுப்பது குறித்து ஆலோசனை நடந்து கொண்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்து முடிவு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
எனவே ராஜஸ்தானை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் 500 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva