திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (22:08 IST)

இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை குறைய வாய்ப்பு- அமைச்சர் தகவல்

gas cylinder
இன்னும் சில நாட்களில் இயற்கை எரிவாயுவின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலக நாடுகளிடையே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் ஆகிய தேதிகளில், இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்யப்படும்.

இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் எரிவாயுவின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து, மத்திய எரிவாயு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

அமெரிக்கா, கனடா, ரஷியா போன்ற நாடுகளில் இருந்து எரிவாயு கொள்முடல் செய்வதில், புதிய முறையைப் பின்பற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கூறினார்.

இதன் காரணமாக குழாய் மூலம் கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயுவின் விலை 10%குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

அதேபோல், சி.என்.ஜி. எரிவாயுவின் விலை 6% விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஹர்தீப் பூரி, ‘’எரிவாயு நுகர்வோரின் நலனுக்காக, பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்பட்டுள்ள முயற்சி வரவேற்கத்தக்கது’’ என்று தெரிவித்துள்ளார்.