செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated: புதன், 1 பிப்ரவரி 2023 (09:11 IST)

மத்திய பட்ஜெட் 2023: கேஸ் சிலிண்டர், அத்தியாவசிய விலை குறைப்பு?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை  இன்று தாக்கல் செய்கிறார். 
 
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஐந்தாவது மத்திய பட்ஜெட்  இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. 2023-24க்கான யூனியன் பட்ஜெட் கோவிட்-19 பின்னடைவு மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் முன்னேற்றங்களுக்கு மத்தியில் சாதாரண பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வருமானவரியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். 
 
அதன்படி சம்பளம் பெறும் பணியாளர்கள் இந்தியாவில் வரி செலுத்தும் முக்கியப் பணியாளர்களில் ஒருவர் மற்றும் அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்படலாம். மொத்த சம்பளம் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், அதற்கும் வரி இல்லை. 
 
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு பொருளாதார நெருக்கடி கொடுப்பதாக பரவலாக தெரிவித்திருந்தனர். எனவே அதை கருத்தில் கொண்டு சிலிண்டர் விலைகள் குறைக்கப்படலாம். 
 
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு மற்றும் நடுத்தர பிரிவினர் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவைகளுக்கு சலுகைகள் கிடைக்கும். குறிப்பாக சிறு, குறு, நடுத்தர பிரிவினர்களின் தொழில் மேம்பாட்டு திட்டங்களுக்கு இந்த பட்ஜெட் உதவலாம்.