செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (16:11 IST)

டெல்லி விவசாயிகள் போராட்டம்; ஆதரவாக களமிறங்கிய காந்தியின் பேத்தி!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காந்தியின் பேத்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பிற மாநில விவசாயிகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடந்த விவசாய பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி விவசாயிகள் போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு காந்தியின் பேத்தி தாரா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள அவர், அரசியல் காரணங்களுக்காக அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், உணவிடும் விவசாயிகளின் உரிமைகளுக்கு ஆதரவளிப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார்.