திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (09:26 IST)

அதிகாலையில் ஆந்திராவில் கொடூர விபத்து; குழந்தைகள் உட்பட 14 பேர் பலி!

ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே அதிகாலையில் ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நெடுஞ்சாலையில் சித்தூரை சேர்ந்த 18 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது வேகமாக ஆம்னி வேன் மோதியுள்ளது. இதனால் 8 பெண்கள், ஒரு குழந்தை, 5 ஆண்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த கோர விபத்து குறித்து அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்து வாகனங்களில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.