1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (15:19 IST)

மேட்ச் செமையா போகுது போல..! – விமானத்திலிருந்து மைதானத்தை பார்த்த மோடி!

தமிழகம் வந்த பிரதமர் மோடி மீண்டும் புறப்பட்டபோது சென்னை சேப்பாக்கம் மைதானத்தை எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் சென்னையிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி வானத்திலிருந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புகைப்படம் எடுத்துள்ளார்.

அதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “சென்னையில் நடக்கும் இங்கிலாந்து – இந்தியா ஆட்டத்தை புறப்படும்போது புகைப்படம் எடுத்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.