வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 மே 2023 (07:46 IST)

இன்று முதல் ரூ.2000ஐ வங்கிகளில் மாற்றி கொள்ளலாம்.. என்னென்ன நிபந்தனைகள்..!

2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த நிலையில் மே 23ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் இன்று முதல் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். தினசரி ஒருவர் 10 நோட்டுகள் வரை மாற்றி கொள்ளலாம் என்றும் அதுமட்டுமின்றி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கியில் எந்தவித ஆவணமும் இன்றி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
2000 ரூபாய் நோட்டுகள் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களிடம் இல்லை என்பதால் பணக்காரர்கள் மட்டுமே நோட்டுகளை மாற்ற வங்கிகளில் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva