1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 மே 2023 (13:09 IST)

வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ.2 லட்சம்: மனவிரக்தியால் வியாபாரி தற்கொலை..!

வங்கி கணக்கில் தவறுதலாக வந்த 2 லட்சம் ரூபாயை திருப்பி தர முடியாத வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது காய்கறி வியாபாரி முருகேசன். இவரது வங்கி கணக்கில் கடந்த ஆண்டு திடீரென 2 லட்சம் ரூபாய் தவறுதலாக வந்தது. இந்த பணத்தை யாரும் உரிமை கோரி வராததால் அவர் அந்த பணத்தை செலவழித்து விட்டார். 
 
இதனை அடுத்து முருகேசன் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் செலுத்தி விட்டதாகவும் அந்த பணத்தை மீட்டு தரும்படி கனரா வங்கியில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் முருகேசன் இடம் சென்று விசாரணை நடத்திய போது பணம் வந்தது உண்மைதான் ஆனால் அந்த பணத்தை செலவழித்து விட்டதாக கூறினார். 
 
இதனை அடுத்து பணத்தை திரும்பி செலுத்த வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்த நிலையில் மனவிரக்தி அடைந்த முருகேசன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
 
Edited by Siva