பள்ளிகள் திறந்தாலும் ஆன்லைன் வகுப்புகளும் தொடரும்: டெல்லி துணை முதல்வர் அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக டெல்லியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் டெல்லியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக டெல்லியில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்லிகள் திறக்கப்பட்டுள்ளன என்பதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்
மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், இன்னும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் பள்ளிகளுக்கு வர விரும்பாத மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 70% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.