புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (08:04 IST)

பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார்? இன்று ராகுல்காந்தி அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்று ராகுல்காந்தி அறிவிக்க உள்ளார.  லூதியானா என்ற பகுதியில் காணொளி வாயிலாக இன்று நடைபெறும் பிரசார கூட்டத்தில் முதல்வர் வேட்பாளரை அதிகாரபூர்வமாக ராகுல்காந்தி அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது முதல்வராக உள்ள சரண்ஜித்சிங் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தாலும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பஞ்சாப் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்று கூறப்பட்டு வருகிறது