முன்னாள் குஜராத் பெண் முதல்வருக்கு கவர்னர் பதவி கொடுத்த மோடி
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாரத பிரதமர் ஆனவுடன் குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றவர் ஆனந்திபென் பட்டேல். குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றபோதிலும் பட்டேல் சமூகத்தினர் மற்றும் தலித் சமூகத்தினர்களின் தொடர் போராட்டம் காரணமாக இவர் சில ஆண்டுகளில் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் தற்போதைய ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் ஓம் பிரகாஷ் கோலியின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த பதவிக்கு ஆனந்திபெண் பட்டேல் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் கல்வி அமைச்சர், முதல்வர் ஆகிய பதவிகளை வகித்த ஆனந்திபென், தற்போது கவர்னர் பதவியை ஏற்கவுள்ளார். அவருக்கு பாஜகவினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.