அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சற்று முன்னர் அலங்காநல்லூர் வந்து சேர்ந்தனர்
இன்னும் சற்று நேரத்தில் அதாவது இன்று காலை சரியாக 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். முன்னதாக வாடிவாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
இந்த ஜல்லிக்கட்டில் 1000 ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளும், 1241 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டியில் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.