டெல்லியை கலக்கிய ஜிக்னேஷ் மெவானி பேரணி...
கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரபிரதேசத்தில் உள்ள தாக்குர் மற்றும் தலித்துகள் இடையில் நடந்த சாதி கலவரத்தில் சந்திரசேகர் அசத் என்ற தலித் தலைவர் கைது செய்யப்பட்டார்.
கலவரத்தில் கைது செய்யப்பட்ட சந்திரசேகர் அசத் விடுதலை செய்யப்பட வேண்டும் என குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மெவானி தலைமையில் யுவா ஹங்கார் பேரணி நடைபெற்றது.
சந்திரசேகர் அசத் விடுதலை மட்டுமின்றி வேலைவாய்ப்பு, சிறுபான்மை சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறைகள் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
பேரணியை பாராளுமன்றத்தின் சாலையில் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி வழங்காத போதும் பேரணி நடைபெற்றது. இதனால், 2,000 மேற்பட்ட காவல்துறையினர் ஜந்தர் மந்தர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஜிக்னேஷ் மெவானி கூறியதாவது, நாங்கள் ஜனநாயக ரீதியாகவே இந்த பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் இந்த ஜனநாயக நாட்டில் ஒரு சட்டசபை உருப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு எங்களை குறிவைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.