வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2019 (16:02 IST)

குடைச்சல் கொடுத்த ஜெகன்? தூக்கில் தொங்கிய ஆந்திர முன்னாள் சபாநாயகர்!

ஆந்திர முன்னாள் சபாநாயகரும் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான கோடெலா சிவ பிரசாத் இன்று தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். 
கோடெலா சிவ பிரசாத் இன்று தனது ஹைதரபாத் வீட்டில் காலை உணவு எடுத்துக்கொண்டு தனது அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகித்த குடும்பத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். 
 
அங்கு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு கட்சியை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
இவரது மரணம் குறித்து அவரது குடும்பத்தாரிடம் கேட்ட போது, ஆளும் கட்சி கோடெலா சிவ பிரசாத், அவரது மகன் மற்றும் மகள் மீது வழக்கு தொடர்ந்து சமீபத்தில்தான் இவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததாம். இதனால் கோடெலா சிவ பிரசாத் மன உலைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 
 
மேலும், கோடெலா சிவ பிரசாத் ஆந்திராவை ஆளும் ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளது. அதோடு தனது மன அழுத்தத்திற்கு ஆளும் அரசுதான் காரணம் என தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
கோடெலா சிவ பிரசாத் 1983 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி துவங்கப்பட்டதில் இருந்து கட்சியில் இருந்தவர். 6 முறை எம்.எல்.ஏ ஆக இருந்துள்ளார். மாநில உள்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவரது மரணம் தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.