வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 மார்ச் 2018 (16:19 IST)

டெலிவரி செய்ய தாமதமானதால் ஃப்ளிப்கார்ட் ஊழியரை கத்தியால் குத்திய பெண்

பெண் ஒருவர் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்திருந்த போன் வர தாமதமானதால், டெலிவரி செய்த இளைஞரை 20 முறை கத்தியால் குத்தியுள்ளார். 
டெல்லியைச் சேர்ந்தவர், கமல் தீப் (30). இவர், ஃப்ளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். போனை டெலிவரி செய்யும் பையன், கமல் தீப் வீட்டின் சரியான முகவரி தெரியாத நிலையில், 2 நாட்கள் தாமதித்து போனை கமலிடம் கொண்டு சேர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமல் தீப், டெலிவரி செய்ய வந்த பையனை கத்தியால் 20 முறைக்கு மேல் குத்தியுள்ளார். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஃப்ளிப்கார்ட் ஊழியரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஊழியரை தாக்கிய கமல் தீப்பை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.