செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (13:56 IST)

நடத்தையில் சந்தேகப்பட்டு 4 மாத கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் கைது

கேரளாவில் 4 மாத கர்ப்பிணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை தாக்கிய அப்பெண்ணின் கணவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் ராஷித்(28). இவரது மனைவி ஜெரினா(24). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. ஜெரினா தற்பொழுது 4 மாத கர்ப்பிணியாக  உள்ளார்.
 
அப்துல் ராஷித் ஜெரினாவை வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் மனைவியின் கர்ப்பத்திலும் சந்தேகப்பட்டு அவருடன் சண்டையிட்டிருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது.
 
சம்பவத்தன்று அப்துல் ராஷித், தன் மனைவி ஒரு கர்ப்பவதி என்றும் பாராமல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், ஜெரினாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கணவர் தாக்கியதில் ஜெரினாவின் இடுப்பின் கீழ் பகுதி செயல் இழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஜெரினாவின் குடும்பமே கவலையில் உள்ளனர்.
இதனையடுத்து ஜெரினாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் அப்துல் ராஷித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.