வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (22:06 IST)

தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகள் கைது

சென்னை பூந்தமல்லியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகே பூந்தமல்லியில் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் அன்பழகன், அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வருவதைக் கண்டு, அந்த வண்டியை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்.
 
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். படுகாயமடைந்த தலைமைக் காவலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பன்னீர்செல்வம், சுதீஷ்குமார் மற்றும் ரஞ்சித் ஆகிய ரவுடிகள் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.