திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (19:17 IST)

தெரு நாய்களிடம் இருந்து பள்ளிக்குழந்தை காப்பாற்ற ஏர் ரைபிள் எடுத்துச் சென்ற தந்தை!

kerala
கேரளாவில்  தெரு நாய்களிடம் இருந்து  பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற  ஒரு நபர கையில் துப்பாக்கி ( ஏர் ரைபிள்) எடுத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தெரு நாய்கள் கடிப்பதால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில்  ஒரு லிஃப்டில் சென்ற  சிறுவனை ஒருவரின் நாய் கடித்து வைத்தது. அப்போது, சிறுவன் நாய்க்கு பயப்படுவது தெரிந்தும், நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல், ஒரு தெரிவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது தெரு நாய் பாய்ந்து அவனைக் கண்டபடி கடித்துக் குதறியது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் நபர்கள் தான் அந்த நாய் யாரையாவது கடித்தாலும், அதற்குப் பொறுப்பெற்க வேண்டும் மருத்துச் செலவையும் ஏற்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கேரளாவில் தெரு  நாய்கள் கடித்து பாதிகப்பட்டவர்கள் அதிகம்,  எனவே ஒரு பள்ளிக் குழந்தையின் தந்தை த குழந்தையை தெரு நாய்களிடம் இருந்து காப்பாற்ற கையில் துப்பாக்கி எடுத்துச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது