திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:16 IST)

வெந்து தணிந்தது காடு படத்தில் நாயகன் ரெஃபரன்ஸ்… லோகேஷ் சொன்ன கருத்து!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நாயகன் படத்தின் ரெஃபரன்ஸ் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடித்துள்ள திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் நேற்று படம் ரிலீஸ் ஆன நிலையில் சிறப்புக் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. திரைத்துறையை சேர்ந்த பலரும் படம் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது “நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இயக்குனர் கௌதம் மேனன் கமல் சாரோட ரசிகர். அதனால் அவர் நாயகன் படத்தின் சில கதாபாத்திரங்களை VTK படத்தில் வைத்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.