வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (11:20 IST)

திரும்ப பெற சொல்லிதான் திரும்புனாப்லயே வறேன்! – டிராக்டரில் ரிவர்ஸ் கியரில் பஞ்சாப் – டெல்லி பயணம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் நாளை டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில் விவசாயி ஒருவர் டிராக்டர் ஓட்டி வருவது வைரலாகியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வேளாண் சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திரும்ப பெற வேண்டும் என கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை குடியரசு தின விழா அன்று மாபெரும் டிராக்டர் பேரணி சம்பவத்தை நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டிராக்டர்களோடு டெல்லியை நோக்கி விரைய தொடங்கியுள்ளனர். பஞ்சாப் விவசாயி ஒருவர் தனது டிராக்டரை ரிவர்ஸ் கியரிலேயே டெல்லி வரை ஓட்டி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திரும்பியபடியே வண்டி ஓட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.