டீசல் இருந்தாதான ட்ராக்டர் பேரணி நடத்துவீங்க! – மாநில அரசுகள் முடிவால் விவசாயிகள் அதிர்ச்சி!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 24 ஜனவரி 2021 (16:01 IST)
இந்திய குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்ட நிலையில் டிராக்டர்களுக்கு டீசல் தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வேளாண் சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திரும்ப பெற வேண்டும் என கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் குடியரசு தின விழா அன்று மாபெரும் டிராக்டர் பேரணி சம்பவத்தை நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் டிராக்டர்கள் வர உள்ளன. இந்நிலையில் உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் டிராக்டர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :