யாருக்கும் தெரியாமல் ஊடுருவிய சீன வீரர்கள், திருப்பியடித்த இந்தியா! – எல்லையில் தள்ளுமுள்ளு!

china
Prasanth Karthick| Last Modified திங்கள், 25 ஜனவரி 2021 (11:02 IST)
சீனா – இந்தியா இடையே எல்லையில் தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில் இந்திய எல்லையில் சீனாவின் ஊடுறுவல் மீண்டும் தடுக்கப்பட்டுள்ளது.

சீனா – இந்தியா இராணுவங்கள் இடையே லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதலால் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயும் அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் சிக்கிம் எல்லையில் சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதை இந்திய ராணுவத்தினர் தடுக்க முயல இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து சீன வீரர்கள் பின் வாங்கியதாகவும், ஆனால் சீன வீரர்களில் 20க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :