இந்திய குடியரசு விழாவில் முதன்முறையாக வங்கதேச படைகள்! – முக்கிய அறிவிப்பு!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 24 ஜனவரி 2021 (09:23 IST)
இந்திய குடியரசு விழா டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் முதன்முறையாக வங்கதேச ராணுவமும் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளது.

ஜனவரி 26ல் இந்திய குடியரசு தின விழா டெல்லியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் வங்கதேசம் விடுதலையடைந்த 50வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் குடியரசு தின விழாவில் இந்திய படைகளுடன் வங்கதேச படைகளும் ராணுவ அணிவகுப்பு நடத்த உள்ளன. முன்னதாக அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்தியாவுடன் இவ்வாறான அணிவகுப்பை நடத்தியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :