புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (08:47 IST)

கருப்பு பூஞ்சை பாதிப்பு… மூன்று சிறுமிகளின் கண்கள் நீக்கம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளின் கண்கள் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சைப் பலனளிக்காமல் சிலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளின் கண்கள் தீவிர பாதிப்புக்கு உள்ளானதால் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.