செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (10:32 IST)

2 டோஸ் போட்டாலும் தாக்கும் டெல்டா வைரஸ்...

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று ஏற்பட கூடும் என ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது. 

 
இந்திய முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட இரண்டாம் அலையால் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய நிலையில் தற்போது 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. எனவே, இந்தியாவில் கொரோனா 2வது அலை விரைவில் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது. 
 
இருப்பினும் டெல்டவில் இருந்து உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் டெல்டா பிளஸ் வேகமாக பரவுதல், நுரையீரல் செல்களோடு ஒட்டிக்கொள்ளுதல், நோய் எதிர்ப்புத் சக்தியை குறைத்தல் ஆகிய தன்மைகளுடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால், ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் மீண்டும் வராது என்ற கூற்றுகளுக்கு நேர்மாறாக உள்ளது இந்த ஆராய்ச்சி முடிவுகள். 
 
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று ஏற்பட கூடும் எனவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு உடலில் உண்டாகியிருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை 20 - 55 % வரை அழிக்கக்கூடிய வலிமை படைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளால் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகளின் செயல் திறனானது டெல்டா வைரஸின் மீது சற்றுக் குறைவாகவே இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.