ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (12:59 IST)

தமிழ்நாட்டிற்கு மாலை 5.30 மணிக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி !

மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாலை 5.30 மணிக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகிறது என தகவல். 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததாகவும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசி தொகுப்புகளை சரியாக தரவில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதன் பின்னர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இந்த நிலை சீரானது. 
 
இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்று பகல் 12 மணிக்குள் அனைத்து தடுப்பூசிகளும் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். இதனிடையே, தடுப்பூசி பற்றாகுறையால் சென்னையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 
 
இதனிடையே, மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாலை 5.30 மணிக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகிறது. மாலை சென்னைக்கு வரும் தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.