”ஏர் இந்தியா”வில் முறைகேடு.. ப.சிதம்பரத்துக்கு சம்மன்
ஏர் இந்தியா நிறுவனத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில், விமானத்துறை அமைச்சர் பதவியை பிரபு பட்டேல் வகித்தபோது, “ஏர் இந்தியா” நிறுவனத்துக்கு ”ஏர்பஸ்கள்’ வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. மேலும் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்தும் விசாரிக்க புகார் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் விமானத்துறை அமைச்சர் பிரபு பட்டேலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் ஆட்சியின் போது நிதியமைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ஆதலால் வருகிற 23 ஆம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.