செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மே 2024 (18:52 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய அடிப்படை சட்ட உரிமை இல்லை: அமலாக்கத்துறை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கான அடிப்படை சட்ட உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ இல்லை என டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய நிலையில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய நிலையில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
 
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இல்லையென்றாலும் பிரச்சாரம் செய்வதற்காக எந்த அரசியல் தலைவருக்கும் இதுவரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது இல்லை. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும் பட்சத்தில் அனைத்து நேர்மையற்ற அரசியல்வாதிகளும் குற்றங்களை செய்ய வழிவகுக்கும்.
 
மக்களவைத் தேர்தல் காலம் என்ற போர்வையில் விசாரணையை தவிர்க்கும் சூழலை ஏற்படுத்தும் என  அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran