இந்த ஆண்டின் முதல் நிலநடுக்கம்: அரியானாவில் மக்கள் அச்சம்!
2023 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ள நிலையில் இன்று முதல் நாளே ஹரியானா மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இன்று 10:56 மணிக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவில் 4.5 என பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் அரியானாவில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் இருந்து வடமேற்கு பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இதனால் மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
2023ஆம் ஆண்டு பிறந்த முதல் நாளே ஹரியானா மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
Edited by Siva