திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (23:18 IST)

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் நிலநடுக்கம்!

அமெரிக்க நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக இந்தோனேஷியா, நேபாளம், உள்ளிட்ட நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ்-ல் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் ரிக்டர் அளவில் 5.3 புள்ளிகளாக நில நடுக்க ஏற்பட்டதாக தகவல் வெளியாகிறது.

 இதில், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்வுகள் ஏற்பட்டு மக்கள் வீதிகளில் வந்தனர்.
இதில், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.