வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஜனவரி 2024 (20:54 IST)

தேமுதிக கழக கொடியினை தமிழகம் முழுவதும் ஏற்ற வேண்டும்- தேமுதிக பொ.செ., பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

premalatha vijayakanth
தேமுதிக நிறுவனரும், தமிழ் சினிமாவின் பிரபல  நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி  தேமுதிக கழக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட நிலையில், கொடியினை தமிழகம் முழுவதும் ஏற்ற வேண்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக நிறுவனரும், தமிழ் சினிமாவின் பிரபல  நடிகருமான விஜயகாந்த் கந்தாண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

விஜயகாந்த் இறப்பதற்கு முன்னரே அக்கட்சியின் பொதுச்செயலாளராக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. எனவே கொடியினை மீண்டும் ஏற்றி பறக்க விட வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக கழக கொடியினை தமிழகம் முழுவதும் ஏற்ற வேண்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
''தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மீண்டும் நாளை 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள நமது தேமுதிக கழக கொடியினை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டுமென கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.