ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:14 IST)

’’கணவருடன் விவாகரத்து’’ ...நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய பெண்

ஒரு பெண் விவாகரத்தானதை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

டெல்லி யூனியனில் வசித்து வருபவர் சோனியா குப்தா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் ஆன புதிதில் இருந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

அதனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தனர். பின்னர் சோனியா வெளிநாட்டில் வேலைக்காகச் சென்றார்.

 இதையடுத்து, அப்பெண்ணிடம் நண்பர்கள் இருவரின் விவாகரத்து குறித்து கேட்டுள்ளனர். இதுகுறித்து யோசித்த அப்பெண் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். சில நாட்களுக்கு முன் இவருக்கு நீஇதிமன்றம் விவாரகத்து வழங்கியுள்ளது.  இதையடுத்து தனது நண்பர்களை  அழைத்து இந்த விவாகரத்திற்குக் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் சோனியா குப்தா. இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது