செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (16:04 IST)

முழு அடைப்பு போராட்டத்திற்கு கேரளா ஆதரவு

நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்தின் போது கேரளாவிலும் முழு அடைப்பு நடைபெறும் என அறிவிப்பு. 

 
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாடு முழுவதும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து அனைத்து மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டத்தின் போது கலவரமும் வெடித்தது.  
 
இருப்பினும் விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் நேற்றுடன் 300 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கை தெளிவாக தெரிந்தாலும் மத்திய அரசு அவற்றை ஏற்க மறுப்பதால் வரும் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
 
நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி முழு அடைப்பு  போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கேரளாவிலும் முழு அடைப்பு நடைபெறும் என ஆளுங்கட்சியான மாக்சிஸ்ட் அறிவித்துள்ளது.