வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (14:03 IST)

பெண்களின் துணிகளை துவைக்கனும் - விநோதமான தண்டனை

பீகார் மாநிலத்தில் பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி நூதன நிபந்தனை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
பீகார் மாநிலம் பாட்னவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்தவர் லாலன் குமார். இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரது கிராமத்தை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 
 
5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் லாலன் குமார் தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி அவினாஷ் குமார், 6 மாத காலத்திற்கு மஜோர் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளார்.