புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (12:02 IST)

பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயரவில்லை: அமைச்சர் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயரவில்லை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிக அளவில் உயர்ந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக காங்கிரஸ் எம்பி வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
 
பெட்ரோலிய பொருள்கள் மீது வரி விதிப்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறோம். கடந்த 300 நாட்களில் 60 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை 7 முறையும் டீசல் விலை 21 முறையும் குறைந்துள்ளன.
 
மேலும் சுமார் 250 நாட்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்துள்ளது. எனவே இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல் டீசல் விலை அதிக அளவில் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டுவது தவறு என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.